ஊட்டியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு! 36 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
Opposition to make Ooty a corporation 36 villagers protest
ஊட்டி நகராட்சியை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு தெரிவித்து 36 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக வெளியாகி உள்ளது.
ஊட்டி நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அதிக அளவில் அரசு திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்வாதாரமும் உயரம் என கருதி ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ஜூலை ஐந்தாம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து 36 கிராம மக்கள் நேற்று கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்ததாவது, ஊட்டியை மாநகராட்சியாக மாற்ற ஊராட்சிகளை அதனுடன் இணைக்க ஊராட்சி, நகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தலார் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு மூலம் வருமானம் தரக்கூடிய பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்படும். எனவே ஊட்டி நகராட்சியுடன் இத்தல்லாரை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.
English Summary
Opposition to make Ooty a corporation 36 villagers protest