பா.ஜ.க தலைவருக்கு ஓ.பி.எஸ் கடிதம்: எதற்காக தெரியுமா?
ops letter to bjp leader
பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனி கட்சியாக செயல்படுகிறது. பா.ஜ.கவை தவிர மற்ற கட்சிகளை இணைத்து போட்டியிடவும் தீவிரம் காட்டி வருகிறது.
அதே சமயத்தில் ஓ. பன்னீர்செல்வம் பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதுபோல் இந்த முறையும் அதே தொகுதியில் மகனை நிறுத்த ஓ. பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். மேலும் அ.தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட தன்னை இந்த தேர்தல் மூலம் அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக 5 தொகுதிகளை கேட்டு பா.ஜ.க தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார். கோபாலகிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், சென்னை மாவட்ட செயலாளர் ஆகியோரை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளார்.