பாரதிராஜாவை நேரில் நலம் விசாரித்த ஓ.பி.எஸ்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில்  திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சிலநாட்களுக்கு முன்பு பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பினார். பிறகு சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். பாரதிராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

இதனையடுத்து, சமீபத்தில் பாரதிராஜா மீண்டும் உடல்நலக்குறைவால் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு சில தினங்களுக்கு முன்பு நலமுடன் வீடு திரும்பினார். 

பின்னர், தான் நலம் பெற்று வீடு திரும்பியதை தொலைபேசி மூலமாக கமல்ஹாசனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS meet in directer barathiraja


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->