இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ஓபிஎஸ் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
ops vote collect to double leaf in paramakudi
ராமநாதபுரத்தில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பரமக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- “ பெரியோர்களே தாய்மார்களே உங்களது பொன்னான வாக்குகளை வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் செலுத்துமாறு” என்று தெரிவித்து உடனடியாக பலாப்பழம் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். பின்னர் “என்ன செய்வது பழக்கதோஷம்” என்று தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், ஒ.பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் 5 பேர் போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு ஓபிஎஸ் ஓட்டுக் கேட்டதை அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
English Summary
ops vote collect to double leaf in paramakudi