செங்கல்பட்டு: அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து பயணிகளுடன் திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கருங்குழி அருகே கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய நிலையில், பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 10 injured in govt Bus overturned in Chengalpattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->