போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றவர் மர்ம மரணம்.. உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்..! - Seithipunal
Seithipunal


போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளர் சரணடைந்தார்.

சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது அங்குள்ள மெட்ராஸ் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் அவரது குடும்பத்தினர் அவரை அனுமதித்தனர். இந்நிலையில் அவர் கடந்த 2ஆம் தேதி இரவு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

 இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  அந்த விசாரணையில் மறுவாழ்வு மையத்திற்கு எதிராக செயல்பட்டதாக கூறி அந்த மையத்தின் உரிமையாளர் ராஜி கூறியிருக்கிறார். இதனடிப்படையில் அந்த மையத்தில் வேலை செய்த ஊழியர்கள் ஏழு பேர் சேர்ந்து அவரை அடித்துக் கொலை செய்தது அம்பலமானது.

 அவர்கள் சித்திரவதை செய்யும் பொழுது அதன் உரிமையாளர் வீடியோ காலில் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அந்த மையத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் மற்றும் மையத்தில் வேலை செய்த ஊழியர்கள் 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

 தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை தேடி வந்த நிலையில் அவர் கோவை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதனை அடுத்து அவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Owner of re addiction center surrendered


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->