ரஜினிகாந்தை பாராட்டிய அமிதாப் பச்சன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ள முடியாததால், அவர் ரஜினிகாந்தை பாராட்டி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 1991-ம் ஆண்டு முகுல் எஸ்.ஆனந்தின் திரைப்படமான 'ஹம்' படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்துள்ளார். 'ஹம்' படப்பிடிப்பின் போது, ரஜினிகாந்த் செட்டின் தரையில் மட்டுமே படுத்துக்கொள்வார். 

அவர் மிகவும் எளிமையானவர். ரஜினிகாந்த் 'அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர்' என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் 'அந்தா கானூன் மற்றும் ஜெராப்தார்' போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amitabh bachchan vedio post about rajinikant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->