விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க போட்டியிடாததற்கு காரணம்? - ப. சிதம்பரம் விளக்கம்?
p Chidambaram explanation ADMK not contest Vikravandi byelection
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க போட்டியிட போட்டி இடாதது மேல் இடத்தின் உத்தரவு என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாமகவின் வெற்றி வாய்ப்பை எளிதாக்குவதற்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கான தெளிவான உதாரணம்.
பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் பிரதிநிதி மூலம் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
p Chidambaram explanation ADMK not contest Vikravandi byelection