நெல் வரத்து 18 லட்சம் டன்னா!!! அரசிடம் விற்க விவசாயிகள் ஆர்வம்!.... - Seithipunal
Seithipunal


சென்னையில் மத்திய அரசின் சார்பில் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடமிருந்து அதிக நெல் மூட்டைகள் வருவதால் உடனுக்குடன் அரிசியாக மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி ,நடப்பு நெல் கொள்முதல் சீசன் 2024 செப்டம்பர் 1 - லிருந்து துவங்கியது. இதற்காக நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் நாகை, தஞ்சை ,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு துவக்கப்பட்டுள்ளன.

மத்திய மற்றும் மாநில அரசு:

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் விவசாயிகளுக்கு 100 கிலோ எடை உடைய குவிண்டால் ,  ரூ.2,450 சன்னரக நெல்லுக்கும், ரூ .2,405 புது ரக நெல்லுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் தமிழக நெல்லுக்கு வெளிச்சந்தையில் வழங்கவதை விட, அரசு அதிக விலையை வழங்குகிறது. எனவே தமிழக மக்கள் பலரும் அரசுக்கு நெல் வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நேற்று முன்தினம் வரை, 18.03 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பதிவு உள்ளது. இதுவே முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 13 லட்சம் டன்னாக  இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டைக் கணக்கிடும் போது ,இந்த ஆண்டு  5 லட்சம் டன் நெல் கொள்முதல் வரவு அதிகமாக உள்ளது.

அரிசி ஆலைகள்:

இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல் பாதுகாப்பாக கிடங்குகள் மற்றும் அரிசி ஆலயங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வாணிப கழகத்திற்கு சொந்தமான 21 அரிசி ஆலைகள் மற்றும் 643 தனியார் ஆலைகளில் அரிசியாக மாற்றப்படுகிறது. மேலும் ஒரு ஆலையின் மாத மொத்த அரவைத் திறனில் 25 % அளவுக்கு நெல் வழங்கப்படுவது வழக்கம், ஆனால் தற்போது 50 % -மாக உயர்த்தி வழங்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paddy import reaches 18 lakh tonnes Farmers are interested in selling to the government


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->