பஹல்காம் தாக்குதல் சம்பவம்..உயிரிழந்தவர்களுக்கு அனைத்து சமூகத்தினரும் அஞ்சலி!
Pahalgam attack All communities mourn the victims
பெரம்பூர் குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்கம் சார்பாக காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 28 ஆன்மாக்களுக்கு 300 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இந்து, இஸ்லாமியர், கிறித்துவர்கள் என்று வேற்றுமை பாராது மதநல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஹரியந்த் நார்த் டவுன் - பெரம்பூர் குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்கம் சார்பாக காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 28 ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மொபைல் ஸ்டார்ச் அடித்தும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 300 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இந்து, இஸ்லாமியர், கிறித்துவர்கள் என்று வேற்றுமை பாராது மதநல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நார்த் டவுன் குடியிருப்பு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் நல சங்கத் தலைவர் ராகேஷ் அகர்வால், துணைத்தலைவர் சுரேஷ்ஜெயின், செயலாளார் விதல் டக்கர், இணைச் செயலாளார் ரமேஷ்ஜெயின், பொருளாளர் மோகன்லால் ஜெயின், ஜெயின் அஸோஸேசியன் நிர்வாகிகள் ஜிதேந்தர் ஜெயின், அசோக் கோட்டாரி, இஸ்லாம் மையம் நிர்வாகி அப்துல் சலாம் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் கிறித்துவ அமைப்பிலிருந்து சாந்தி மற்றும் குடியிருப்பு வாசிகள் கலந்து கொண்டனர் .
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் நார்த் டவுன் குடியிருப்போர் நலசங்க துணைத் தலைவர் சுரேஷ் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசியதாவது : - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யபட்ட 28 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது இந்திய நாட்டின் மிக கொடுமையான சம்பவம் .தீவிரவாதிகள் ராணுவத்துடன் மோதாமல் அப்பாவி மக்களை கொல்வது கோழைத்தனமானது. இந்திய வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வு நடந்தில்லை. மறுபடியும் இதுபோன்ற கொடுஞ்செயல் நடக்கக்கூடாது . மத்திய அரசு அந்த தீவிரவாத கொடுஞ்செயலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.
English Summary
Pahalgam attack All communities mourn the victims