திருநெல்வேலி: மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் மேலக்கரையை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் பெயிண்டர் அழகேசன் (31). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அழகேசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கட்டான்தோப்பில் கோவில் கொடை விழாவிற்காக குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து அழகேசன் நேற்று இரவு அங்குள்ள மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அழகேசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அழகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சுத்தமல்லி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter falls from terrace and dies in Tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->