தலையாலேயே தல உருவத்தை வரைந்த ஓவியர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டார் என்றும் ak என்றும் அழைக்கப்படும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள இவர் மே மாதம் ஒன்றாம் தேதி பிறந்துள்ளார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் விழா கணக்காக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மே ஒன்றான இன்று நடிகர் அஜித்குமார் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

இவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திருக்கோவிலூர் அடுத்த மணலூர் பகுதியைச் சேர்ந்த ஓவியர் சு. செல்வம் என்பவர் தனது தலையில் பிரஷைக் கட்டிக் கொண்டு தல அஜித்தின் படத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

painter s selvam draw actor ajithkumar picture own head


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->