தொழிற்சாலை கழிவறையில் கன்னட மொழி குறித்து இழிவான வாசகம் - பெங்களூருவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் நானூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவறையில் கடந்த 14-ந் தேதி இரவு 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கன்னட மொழியில் கன்னட மொழி குறித்து இழிவாக எழுதப்பட்டிருந்தது.

இதை பார்த்த தொழிற்சாலை நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற கன்னட அமைப்பினர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தொழிற்சாலை நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pakisthan support words write factory toilet in banglore


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->