பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்! போக்குவரத்து நெரிசலால் கடும் சிரமம்! - Seithipunal
Seithipunal


இன்று விடுமுறை நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்:

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் உலகின் புகழ்பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடனாக முடி காணிக்கை, மயில் காவடி, தீர்த்த காவடி, போன்றவை பக்தர்கள் எடுத்து வழிபடுகின்றனர்.

இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளனர். மலைக்கோவில் மட்டும் இன்றி அடிவாரம், கிரிவீதி உள்ளிட்ட பகுதிளிலும் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்காக காத்திருக்கின்றனர். 

இதனால் மலைக்கோவில் அடிவாரத்தில் இருந்து செல்லும் பிரதான வழியான படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

பழனி கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் கார்கள் மற்றும் வேன்களில் அதிகமாக வந்திருப்பதால், அடிவாரம் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சுவாமி தரிசனம் செய்த பின் சொந்த ஊருக்கு திரும்பும் பக்தர்கள், பழனி பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பேருந்துகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani devotees gathered


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->