பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போனுக்கு கட்டணம்! அமல் தேதி வெளியீடு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அனுமதி இன்றி செல்போன் மற்றும் கேமராக்கள் மூலம் கருவறையில் உள்ள சுவாமியை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். 

இதனை தடுக்கும் வகையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன், கேமரா போன்றவற்றை அடிவாரத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவில் ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ''பழனி கோவிலுக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

செல்போன் போன்ற சாதனங்களை படிப்பாதை அல்லது ரோப் கார் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும். 

அதற்காக ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு அதனை பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம். 

இதற்கான வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது'' என்றார். இதற்கு முன்னதாக கோவிலில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது பக்தர்கள் கொண்டு வரும் செல்போனுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palani Murugan temple devotees cellphones protect charges


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->