2% கமிஷன் வரனும்.. கரார் காட்டிய ஊ.ம தலைவர்.. தட்டி தூக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை.!!
Panchayat president arrested for bribe
கடலூர் ஆபரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சர்குருநாதன் அரசு திட்டங்களை டெண்ட் எடுக்கும் நபர்களிடம் கட்டாயம் 2% கமிஷன் தரவேண்டும் என்று கரார் காட்டுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிம் புகார் பெற்றுள்ளது.
அந்த புகாரின் அடிப்படையில் சர்குருநாதனை நோட்டமிட்ட லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் மஞ்சக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெறும் பணிகளுக்கு 2% சதவீத கமிஷனாக 30,000 ரூபாய் பேசி 15 ஆயிரம் ரூபாய் பெற்றபோது கைது ஊராட்சி மன்ற தலைவர் சர்குருநாதனை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
English Summary
Panchayat president arrested for bribe