சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து.! குடும்பத்துடன் சிக்கிய பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


சென்னை பாண்டி பஜாரில் உள்ள துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

சென்னை தி.நகர் பாண்டி பஜார் சாலையில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மூன்று தளங்களைக் கொண்ட வணிக வளாகத்தில் துணிக்கடை மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகம் ஆகியவை தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினரும் மூன்றாவது தளத்தில் சிக்கியுள்ளனர். தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு எங்களை உயிருடன் மீட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pandi Bazar dress shop fire accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->