ஒரே இரவில் சதமடித்த பாபநாசம் அணை .. 100 அடியை எட்டியது நீர் மட்டம் ..!! - Seithipunal
Seithipunal



மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தின் பிரதான அணையாக உள்ள பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த அணையின் நீர் மட்டம் 86 அடியாக இருத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று 97.50 அடியாக பாபநாசம் அணையின் நீர் மட்டம் அதிகரித்தது. இதையடுத்து நேற்று இரவும் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் 99.90 அடியை எட்டியது.

இதையடுத்து இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களில் மட்டும் பாபநாசம் அணையின் நீர் மட்டம் 14 அடி வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில் இன்று காலை  நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 2,576 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப் படுகிறது. முன்னதாக பாபநாசம் அணையின் உயரம் 143 அடி என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Papanasam Dam Enters 100 Feet Water Level in Overnight


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->