புத்தாண்டு கொண்டாட வாங்கிய கேக்கில் பேப்பர் துண்டு! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தனது மகன்களுடன் கணியூர் பகுதியில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றுக்கு நேற்று சென்றிருந்தார்.

அங்கு அவர், கேக்குகள் வாங்கி மகன்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அதனை அவரது மகன் சாப்பிட முயன்றபோது அதில் கருப்பாக ஒரு பொருள் இருப்பதை பார்த்துள்ளார். உடனே கார்த்திகா சந்தேகமடைந்து அதனை எடுத்து பார்த்தபோது அது பேப்பர் துண்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து கார்த்திகா கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது, இது தனது தவறு அல்ல என்றும், ஊழியர்களின் தவறு என்றும், புத்தாண்டு சமயத்தில் இதுபோன்று நடப்பது இயல்பு என்றும் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த கார்த்திகா சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இந்த சம்பவம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

papper piece found in cake customer shocked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->