பரம்பிக்குளம் அணையின் மதகின் பழுதால் தண்ணீர் வீண்! - Seithipunal
Seithipunal


அணையின் மதகு பழுதானதால் 20 ஆயிரம் கண்ணாடி நீர் வெளியேறுகிறது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சோலையாறு அணை நிரம்பியதும் உபரி நீரானது பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்படும்.

 பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையில் மொத்தம் மூன்று மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. அணையில் நிரம்பும் நீர் கேரளத்திற்கு பாதியும் தமிழகத்திற்கு பாதியும் என ஒப்பந்த முறையில் திறந்து விடப்படுகிறது. 

நேற்று இரவு அணையின் முழு கொள்ளளவான 72 அடியை நெருங்கியுள்ளது. கேரள பகுதிக்கு நீர் திறக்க இரண்டாவது மதகு திறக்கப்படும் பொழுது பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து சுமார் 20000 க.அடி வீதம் நீர் வெளியேறும் முழு உபரி நீரும் கேரளப் பகுதி கடலுக்கு சென்று வீணாகிறது. அணையின் மதகுகள் சரிவர பராமரிக்கப்படாததால் பழுது ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parambikulam dam water is wasted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->