பரந்தூர் விமான நிலையத்தை கைவிடக் கோரி கிராம சபையில் தீர்மானம்.!
Paranthur airport Village council meeting resolution
பரந்தூர் பசுமை விமான நிலையத்தை கைவிடக் கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சி திட்டமாக திமுக அறிவித்த பரந்தூர் விமான நிலைய திட்டம் தற்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் எதிர்க்கப்படும் திட்டமாக மாறியுள்ளது.
"விமான நிலைய திட்டம் மற்றும் எட்டு வழி சாலை திட்டத்தை திமுக கைவிட வேண்டும்." என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமப்புறங்களில் அனைத்திலும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் கிராமத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
அப்பொழுது அந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் பசுமை விமான நிலையத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தினால் 13 கிராமங்கள் பாதிக்கப்படும் என்று மக்கள் அச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Paranthur airport Village council meeting resolution