அப்படிப்போடு!!!'சமாதானம்' என்ற போர்வையில் உறைந்த மோதலை எங்கள் மக்கள் ஏற்கமாட்டார்கள்...!!- உக்ரைன் துணை பிரதமர் யூலியா - Seithipunal
Seithipunal


கடந்த 4 வருடங்களாக உக்ரைன்-ரஷியா போர் நடந்து வரும் நிலையில் தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்கா தீவீரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று லண்டனில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்து போரை நிறுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில், 'கிரிமியாவை ரஷிய பிரதேசமாக ஏற்றுக்கொள்ளும்' என்ற டிரம்புடைய திட்டத்தை உக்ரைன் நிராகரித்துள்ளது.இதில் கிரிமியாவை ரஷியப் பிரதேசமாக ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் சபோரோஷியே மற்றும் கெர்சன் மீதான ரஷ்ய கட்டுப்பாட்டை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் இந்த திட்டம் தெரிவிக்கிறது.

இருப்பினும், உக்ரைனில் ரஷிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களை அங்கீகரிக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஏற்கப் போவதில்லை என்று உக்ரைன் ஜனாதிபதி 'வோலோடிமிர் ஜெலென்ஸ்கி' ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இதில் நேற்று, ரஷியா கையகப்படுத்திய கிரிமியாவை உக்ரைன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், இந்த திட்டம் உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதாகவும்  ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், "உக்ரைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அமெரிக்கா இந்த அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகும்" என்று எச்சரித்தார்.

உக்ரைனின் துணைப் பிரதமர் 'யூலியா ஸ்வைரிடென்கோ' தெரிவிக்கையில்,' தங்கள் நாடு பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளது, ஆனால் சரணடையத் தயாராக இல்லை. சமாதானம் என்ற போர்வையில் உறைந்த மோதலை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Our people not accept frozen conflict under guise peace Ukrainian Deputy Prime Minister Yulia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->