பள்ளிகள் திறந்து 45 நாட்கள் ஆகியும் சீருடையும், புத்தகங்களும் வழங்கப்படவில்லை - அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் பள்ளிகள் திறந்து 45 நாட்கள் ஆகியும் இன்னும் சீருடையும், புத்தகங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட எந்த பொருட்களும் இதுவரை வழங்கப் படவில்லை என்று அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச பாடநூல்கள், காலணிகள், சீருடைகள், கம்பளிச் சட்டை, மழைக் கோட்டு, கணித உபகரணப் பெட்டிகள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன. 

ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததுமே பாடநூல்கள் வழங்கப்பட்டு விடும். இதைத் தொடர்ந்து சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட மற்ற பொருட்களை ஜூலை மாதம் ஆரம்பித்து 10 நாட்களுக்குள் வழங்கப் பட்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான பள்ளிகளில் சீருடைகள் மட்டுமே வழங்கப் பட்டுள்ளன என்றும், மேலும் பல பள்ளிகளில் அது கூட வழங்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் தெரிவிக்கையில், "இந்த ஆண்டு பாடநூல்கள் மற்றும் கிரையான்கள் மட்டுமே இதுவரை வழங்கப் பட்டுள்ளன. மற்ற பொருட்களின் நிலை என்னவென்று இதுவரை தகவல் இல்லை. எனவே மாணவர்கள் அவர்களது செலவில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் வாங்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். எனவே அரசு விரைந்து இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents Questiond About Uniforms And Books Are Not Provided To TN Govt School Students


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->