வாக்குச்சாவடி மையத்திலும்., பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் காமெடி செய்த வைகைப்புயல் வடிவேலு.!!
parliament election vadivel vote her votes and speech about current election
இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வரும் நிலையில்., நடிகர் வடிவேலு தனது வாக்கினை பதிவு செய்தார். தனது வாக்குகளை பதிவு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்தாவது., தற்போதுள்ள இளைஞர்கள் மிகுந்த விழிப்புடன் உள்ளனர்., அவர்கள் யாருக்கு வாக்குகளை வழங்கினால் நாட்டிற்கு நல்லதை செய்வார்கள் என்று அவர்களுக்கு அதிகளவில் தெரிந்துள்ளது., அவர்களின் உள்ளங்கையில் உலகை வைத்துள்ளனர்., அதிக திரைப்பட நகைச்சுவை கதாபாத்திரத்தில் நான் வாக்குகள் குறித்து கூறியுள்ளேன்., இப்போது நான் கூற விரும்பவில்லை என்று தனது நகைச்சுவை பாணி மாறாமல் நகைச்சுவையுடன் வடிவேலு தனது உரையை நிறைவு செய்தார்.
English Summary
parliament election vadivel vote her votes and speech about current election