வெட்கக்கேடு... வெட்கக்கேடு... தமிழக எம்.பி.க்களை கதறவிட்ட பாஜக எம்.பி.க்கள்!
Parliament Lok Sabha Anurag Takur say about Kallakurichi liquor death issue
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிரொலித்துள்ளது.
இன்று மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், "தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்துள்ளனர், இது குறித்து எதிர்க்கட்சிகள் எழுந்து நின்று பதில் அளிக்க வேண்டும்" என்றார்.
அப்போது, வெட்கக்கேடு... வெட்கக்கேடு... என தமிழக எம்.பி.க்களை நோக்கி ஆளுங்கட்சியான பாஜக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
உடனடியாக இதற்க்கு தமிழக எம்.பி.க்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக திமுக எம்பி தயாநிதிமாறன் தனது கடும் கணடனத்தை தெரிந்தார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் இண்டி கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் முடக்கி குரல் எழுப்பி வரும் நிலையில், இன்று அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகத்தில் கள்ளச்சாராய மரண விவகாரத்தை பாஜக கையிலெடுத்து உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரமும், விமர்சனமும்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்த கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து, 21 பேரை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், தமிழக முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கையில் களமிறங்கி உள்ளனர்.
அதே சமயத்தில் இந்த கள்ளச்சாராயம் மரணங்களை பொறுத்தவரை தமிழக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்த கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியகா காந்தி உள்ளிட்டவர்கள் இதுவரை எந்த கருத்தையோ அல்லது கண்டனத்தையோ தெரிவிக்காதது ஏன் என்று, மத்திய அமைச்சர்கள் முதல் பாஜகவின் மூத்த தலைவர்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாராளுமன்றத்தின் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக எம்பிக்களை நோக்கி, கள்ளச்சாராய விவகாரத்தை சுட்டிக்காட்டி, மக்களவையில் உங்களுக்கு பேசவே தகுதி இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Parliament Lok Sabha Anurag Takur say about Kallakurichi liquor death issue