#கோவில்பட்டி || தீவிரமடையும் போராட்டம்.. பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்.!!
Passengers are dropped half way at kovilpatti
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் தொமுச தொழிற்சங்க தொழிலாளர்கள் வைத்து இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநகரப் பேருந்துகள்இங்கிவரும் நிலையில் ஒரு சிலர் பனிமலையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது.
அதேபோன்று விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட 27% பேருந்துகளும், சேலம் மண்டலத்திற்குட்பட்ட 97% பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 95% பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்குட்பட்ட 85% பேருந்துகளும், நெல்லை மண்டலத்துக்குட்பட்ட 72% பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தீவிடமடைய தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணிகள் பாதி வழியிலேயே இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இருந்து நெல்லைக்கு செல்ல வேண்டியவர்களை கோவில்பட்டி அருகே சென்று கொண்டிருந்த பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படடுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கி விடாமல் நடுரோட்டில் இறக்கி விடப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Passengers are dropped half way at kovilpatti