பயணிகள் அதிர்ச்சி!...மதுரை, கோவைக்கு செல்ல பன்மடங்கு உயர்ந்தது விமானக் கட்டணம்!
Passengers shocked flight fares to go to madurai and coimbatore have increased manifold
சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.
இதனை தவிர்ப்பதற்காக சிலை மார்க்கமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில், நாளை ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜய தசமி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு விமானங்களில் சில பயணிகள் சொந்த ஊர்களுக்கு இன்றே புறப்பட தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், வழக்கத்தைவிட விமானங்களில் கட்டணவிலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கமாக ரூ. 5,000 வரை விற்கப்படும் நிலையில், இன்று ரூ. 16,000 வரை விற்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சிக்கு அடைந்துள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களின் கட்டணம் ரூ.3,300-இல் இருந்து ரூ.13,000 வரை இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில், கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு ரூ. 3,000 வரை பயணச்சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சிக்கு அடைந்துள்ளனர்.
English Summary
Passengers shocked flight fares to go to madurai and coimbatore have increased manifold