2 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை நிறுத்தம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கல்வி, சுற்றுலா, வேலை உள்ளிட்ட பல காரணங்களுக்காக பொதுமக்கள் பாஸ்போர்ட் எடுத்து வருகின்றனர். இது பாஸ்போர்ட் சேவா திட்ட இணையதள சேவை (www.passportindia.gov.in) என்ற முகவரி மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் ஒரே நேரத்தில் பதிவு செய்வதால் சில தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இந்த நிலையில், பாஸ்போர்ட் இணையதள சேவையில், இன்று இரவு 8 மணி முதல் வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பராமரிப்பு பணி காலத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு எந்த சேவையும் கிடைக்காது. ஆகவே விண்ணப்பதாரர்கள் முன்அனுமதி மற்றும் விளக்கங்களுக்கு திட்டமிடப்பட்ட பராமரிப்புக்குப் பிறகு இணையதள முகவரியை பார்வையிடுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passport seva stop 2 days for renovation work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->