விருந்து நிகழ்ச்சியியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மதபோதகர் உறவினர் கைது.!
pastor relative arrested for harassment case in tenkasi
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மதபோதகர் ஜான் ஜெபராஜ் வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டு சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தலைமறைவான மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரான, கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த பெனட் ஹரீஸ் என்பவரை கோவை மாநகர மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pastor relative arrested for harassment case in tenkasi