அண்ணாமலை நடைப்பயணத்திற்கு தடை கோரும் அதிமமுக!  - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைப்பயணத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று, அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பசும்பொன் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் இதுவரை செய்யாத நிலையில், தான் மனிதாபிமான உணர்வோடு மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தியாவசிய பொருட்களை கொடுக்க தமிழக அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் வந்துள்ளதை அ.தி.ம.மு.க. வரவேற்பதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், "மத்தியில் மக்கள் விரோத பா.ஜனதா மோடி அரசுக்கு எதிராக அமைந்துள்ள இந்தியா கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரு பான்மை மக்களை பா.ஜ.க. வினர் திசை திருப்ப முயல் கின்றனர். 

மணிப்பூர் தொடங்கி ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெறுப்பு பேச்சு கலவரத்தை தூண்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத் தோடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கி உள்ளார். 

அவரது நடைப் பயணம் நகைப்புக்குறியதாக இருக்கிறது. அண்ணாமலையும் அவருடன் வரும் கும்பல்களும் தமிழகத்தில் அமைதியாக வாழும் சிறுபான்மை மற்றும் பட்டியல் சாதி மக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி நடைப்பயணம் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்க சதி செய்கிறார். 

தமிழக அரசு உடனடியாக விழித்து கொண்டு ஹரி யானா, மணிப்பூர், டில்லி போல் அல்லாமல் கல வரத்தை தடுத்திட அண்ணா மலை கலவர நடைப்பயணத்தை தடை செய்ய வேண்டும் என்று பாண்டியன் தனது அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pasumbon Pandian say Annamalai trekking should be banned


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->