கோவையில் பரபரப்பு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கோவையில் பரபரப்பு... மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தற்கொலை.!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புகழ் ராஜா. இவர் கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி வாகன விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். அதன் பின்னர் அவர் சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மேல்சிகிச்சைக்காக கோவை கே எம் சி எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இவரைக் கவனிப்பதற்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.

இந்த நிலையில், புகழ் ராஜா இன்று அதிகாலை அறையிலிருந்து வெளியே வந்து ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றவரை நீண்ட நேரமாக காணவில்லை என்று உறவினர்கள் தேடியுள்ளனர்.

அப்போது புகழ் ராஜ ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் போலீசார் நோயாளி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

patient sucide in coimbatore hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->