விவசாய நிலத்தை வீட்டு மனையாக மாற்றிய பெண் சார்பதிவாளர் பணியிட நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரத்தில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்ததாக பெண் சார்பாக பணிகளை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய தடை விதித்து தமிழக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டம் இயற்றி அரசாணை வெளியிட்டது. 

இதனை மீறும் வகையில் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் வசந்தி என்ற சார்பதிவாளர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வைத்திருந்த பலருக்கு வீட்டு மனைகளாக பதிவு செய்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் சார்பதிவாளர் வசந்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த வசந்திக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு சென்ற பொழுது அவரை வேலையில் இருந்து பணியிடம் நீக்கம் செய்துள்ளதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pavurchutram Register officer was suspended for corruption


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->