பத்து முறை சொல்லிட்டாங்க... இலங்கையில் இல்லை.. மீண்டும் சர்ச்சை கிளப்பும் பழ.நெடுமாறன்..!! - Seithipunal
Seithipunal


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு 10 முறைகளுக்கு மேல் பொய்யான தகவலை பரப்பி ஈழத் தமிழர்களின் மன உறுதியை உருக்குலைக்க முயன்றதாக உலகத்தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது "கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இவ்வாறு அவர்கள் அறிவிப்பது முதல் முறை அல்ல. 

கடந்த 1984 ஆம் ஆண்டில் இருந்து இதுபோல் 10க்கும் மேற்பட்ட முறை சிங்கள அரசும், சிங்கள ராணுவமும் அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள ஈழ தமிழர்கள், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் மன உறுதியை குறைக்க வேண்டும். அவர்கள் அச்சமடைய செய்ய வேண்டும். ஈழத் தமிழர்களின் எதிர்ப்பை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே செய்தியை சொல்கிறார்கள். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அது பொய்த்துப் போகிறது. மீண்டும் அதையே பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள தடவியல் அறிஞர்களில் முக்கியமானவர் டாக்டர் சந்திரசேகரன். அவர் சென்னை தடயவியல் நிலையத்தில் இயக்குனராக இருந்தவர். 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலை நாங்கள் கண்டெடுத்து விட்டோம் என 20ம் தேதி 11 மணிக்கு இலங்கை இராணுவம் அறிவித்த அரை மணி நேரத்தில் டிஎன்ஏ தடவிய சோதனை செய்துவிட்டோம். அது பிரபாகரன் உடல் தான் என உறுதி செய்து விட்டோம் என அறிவிக்கிறார்கள்.

இதை இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த பொன்சேகா அறிவித்திருந்தார். இதனை மறுத்து அப்பொழுதே டாக்டர் சந்திரசேகர் பகிரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். டிஎன்ஏ பரிசோதனையை ஒரே நாளில் செய்ய முடியாது எனவும் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் ஆகும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று டிஎன்ஏ பரிசோதனை செய்தது உண்மை என்றால் ரத்தத்தை ஒப்பிட்டு பார்க்க உடன் பிறந்தவர்கள், அவரது பிள்ளைகள், பெற்றோர்களின் ரத்த மாதிரிகள் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒப்பிட்டு பார்க்க முடியும். எல்லாவற்றையும் விட இலங்கையில் டிஎன்ஏ சோதனை செய்யும் வசதியே கிடையாது.

அவ்வாறு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு தான் அனுப்பி இருப்பார்கள் நாங்கள் தான் அதை பரிசோதனை செய்து அனுப்புவோம் என்று பகிரங்கமாக தெரிவித்து இருந்தார். இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்..? எனவே இலங்கை ராணுவம் அறிவித்தது முற்றிலும் பொய். அதேபோன்று பிரபாகரன் கொன்றதாக சிங்கள அரசு பகிரங்கமாக அறிவித்த நிலையில் ஏன் இன்றுவரை மரண சான்றிதழ் வழங்கவில்லை" என பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பி உள்ளார். பழ.நெடுமாறனின் இத்தகைய பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pazha Nedumaran create controversy in Prabhakaran death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->