புதுக்கோட்டை: தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்ட ஆண் மயிலின் உடல்.!  - Seithipunal
Seithipunal


இறந்த மயிலின் உடல் தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகில் ஒரு ஆண் மயில் உயிரிழந்து கிடந்துள்ளது. செம்பட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் அந்த ஆண்மையில் வந்த போது உயர் மின்னழுத்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த ஆண்மையில் உரசி உயிரை விட்டுள்ளது. 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற வனத்துறையினர், அந்த மயிலின் உடலை மீட்டுள்ளனர்.

பின் வனத்துறையினர் மற்றும் செம்பட்டி காவல்துறையினர் இருவரும் சேர்ந்து ஆண்மயிலின் உடலை தேசியக்கொடி போர்த்தி அடக்கம் செய்துள்ளனர். தேசிய பறவை என்பதால் இவ்வாறு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

peacock died in pudhukottai and respect with national flag


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->