மக்களே உஷார்! ஆன்லைன் கடன் செயலி குறித்து டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மொபைல் போனில் கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து பணத்தை பறிகொடுக்க வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடன் செயலிகள் மூலம் பலரும் ஏமாற்றப்படும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. தாங்கள் வாங்கிய பணத்திற்கு அதிகமான தொகை செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலும் பணத்தை செலுத்தாததால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கியது குறித்து தெரிவிப்பதாலும் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கும் நிகழ்வுகளும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் இது போன்ற கடன் செயலி மோசடிகளை தடுப்பது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “கடன் செயலி மோசடி என்பது மிக பிரபலமாகிவிட்டது. இளைஞர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட கடன் வாங்கலாம் என கடன் செயலியை பதிவிறக்கம் செய்கிறார்கள்.

முதலில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் போது குடும்ப தகவல்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் புகைப்பட கேலரியை பயன்படுத்த அனுமதி கேட்கப்படுகிறது.

கடனாக வாங்கிய பணம் முழுவதையும் கட்டி முடித்த பிறகு கூடுதலாக மேலும் பல ஆயிரங்களை அவர்கள் கட்ட சொல்வார்கள். நீங்கள் அந்த பணத்தை கட்ட மறுத்தால் உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு கடன் வாங்கிவிட்டு பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்று கூறுவார்கள். மேலும் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை மார்ஃபிங் செய்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புவார்கள்.

உங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், கோபத்தையும் உண்டாக்குவார்கள். இந்த செயலிகளால் பணத்தை இழந்தவர்கள் ஏறாளமானோர் இருக்கிறார்கள். எனவே கடன் செயலியை பதிவிறக்கம் செய்யாதீர்கள். கந்து வட்டி, மீட்டர் வட்டி போல கடன் செயலி மூலமாகவும் உங்களை ஏமாற்றிவிடுவார்கள். சைபர் குற்றம் குறித்து மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People beware DGP sylendra babu warns about online loan app


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->