Vellore : அரசு பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்.. தோளப்பள்ளியில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் தோளப்பள்ளி பகுதியில் அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளான நிலையில் தற்போது அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People capture govt bus for drinking water issue in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->