நாகர்கோவிலில் சுனிதா வில்லியம்ஸ்சுக்கு  பாராட்டும் விழா நடத்திய பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ்சுக்கு  பாராட்டும் விழா நடைபெற்றது.

இந்தியா - குஜராத் மாநிலம் மெஷசானா மாவட்டத்திலுள்ள ஜிலாசன் கிராமத்தை பூர்விகமாக கொண்ட  தந்தையர்  தீபக்பாண்ட்யா ( 1957-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார் ) தாயார் உர்சுலின்  போனிபண்டயா, ஸ்லோனியாவை  சேர்ந்தவருக்கு பிறந்தவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ்  ஆவார். சுனிதா வில்லியம்ஸ்ன் சகோதரர் தினேஷ் ராவல்  அகமதாபாத்தில் வசிக்கிறார். ஆராய்ச்சி பணிக்காக சென்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் பயணித்த ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவரால் 8 - நாளில் முடிக்க வேண்டிய பணியை 9 - மாதமாக நீட்டிக்க வேண்டிய எதிர்பாராத சூழல் ஏற்பட்டது.

 சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் தன்னம்பிக்கை, தைரியம் ,விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, குழுமப் பணி ,வந்தவற்றை எதிர்கொண்டு வேதனையை சாதனையாக்கிய இரண்டாவது இந்திய வம்ச வழி அமெரிக்க விண்வெளி வீராங்கனை அவர். ( முதல் இந்திய வம்சவலி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விண்வெளியில் இருந்து திரும்பும்போது விண்கலம் தரையில் வெடித்து சிதறியது இதில் கல்பனா சாவ்லா பலியானார் இது பெரும் துக்கத்தை தந்தது. ). விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணியாகவும்   விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக நேரம் செலவழித்து  பணி செய்த  சாதனையாளராகவும் சுனிதா வில்லியம்ஸ் திகழுகிறார். 

 ஐ .எஸ்.எஸ் - விண்வெளி நிலையத்தில் 16-3-2025 -ல் இணைந்த குரு டிராகன் விண்கலம் 18-3-2025 -ல் விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து மணிக்கு 28000 - கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து  அட்லாண்டிக்  கடலில்  டால்ஃபின்கள் வரவேற்க ( புளோரிடா கடல் பகுதியில் ) 19-3-2025- ல் இந்திய நேரப்படி காலை 3.23  மணிக்கு வந்து சேர்ந்தது . மீட்பு கப்பல் மூலம் விண்கலம் எடுக்கப்பட்டு முறையே நிக்ஹெக், கோர்புநோவ்,சுனிதா வில்லியம்ஸ் ,புட்ச் வில் மோர்  ஆகியோர் பத்திரமாக வெளிவந்தனர் அவர்களை விஞ்ஞானிகள் அதிகாரிகள் கைகுலுக்கி  மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

பல தேசங்களில் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன குறிப்பாக நமது தேசத்திலிருந்து இந்திய ஜனாதிபதி, பாரதப் பிரதமர் , தமிழக கவர்னர், தமிழக முதல்வர் , மத்திய மாநில அமைச்சர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பாராட்டும் நிகழ்வில் சென்னையிலிருந்து வருகை தந்த திருமதி. ரம்யா முன்னிலை வைக்க மரு. கு. சிதம்பர நடராஜன் அவர்கள் தலைமையில் பசுமை நாயகன் .மரு. தி. கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவர் தி .கோ.நாகேந்திரன், சமூக சேவகர் பேசுகையில் இறைவன்  அருளால் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்த அனைவருக்கும்  வாழ்த்துதல் தெரிவிப்பதோடு குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்வில்மோர் ஆகியோரை 286- நாட்களுக்குப் பிறகு பூமிக்கு அழைத்து  வந்த பணியை விரைவுப்படுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கும், ஏலான் மஸ்க்,  ஸ்பேஸ் எக்ஸ் ,நாசா மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.

 இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி நமது நாட்டை வளர்ந்த நாடாக , வளமுள்ள நாடாக ,  வலிமையுள்ள நாடாக மாற்ற அனைத்து  விஞ்ஞானிகளும்  நம்மவர் இஸ்ரோ தலைவர் முனைவர்.வி .நாராயணன் பாடுபடுவார்கள் எனவும்  அதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் நமது மத்திய அரசும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் செய்வார்கள் என நம்புவோம் . மங்கையர்களுக்கு முன்  உதாரணமாக திகழ்கின்ற  விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விண்வெளி பயணத்தையும் செயல்பாட்டையும் மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலம் வருங்கால சந்ததியருக்கு ஆக்கமும், ஊக்கமும் ,உந்து வேகமும் அளிக்கும் வரலாறாக அறியப்படும். 

 வருங்கால விண்வெளி திட்டங்களில் இவர்களின் பெயர் சூட்டுவதால் சமுதாயத்திடையே விண்வெளி பயன்பாடும் இந்திய குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் நினைவில்  வருவதோடு   உரிய அங்கீகாரம்  வழங்கப்பட்டதாகவும் அமையும் எனவே மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டுதல் செய்தார்.
 
கலந்து கொண்ட அனைவருக்கும் பழங்களும் இனிப்புகளும் வழங்கும் நிகழ்ச்சியை மரு. கு. சிதம்பர நடராஜன் தொடங்கி வைக்க பொது மக்களுக்கு முருகன் வினோகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு பிரேமா, விஜயலட்சுமி, மகேஸ்வரி ,செல்வி, ஜெமிலா ,அபி ,ராஜஸ்ரீ, லாவன்யா ஆகிய மகளிர் செய்தது உண்மையிலேயே உணர்ச்சிபூர்வமாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  அனைவரையும் பாராட்டும் நிகழ்வாக இருந்தது .

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People felicitate Sunita Williams in Nagercoil


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->