சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்கள் திறுத்தப்பட வேண்டும்; முதலில் மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்; முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு..!
People need to be aware of cyber crimes Former DGP Shailendra Babu
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடைபெற்றது. குறித்த பேரணியை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
அத்துடன் இந்த நிகழ்வில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகா ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்டு தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சைலேந்திரபாபு, சைபர் குற்றங்களில் சிக்காமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,600 கோடி பணத்தை பொதுமக்கள் சைபர் குற்றவாளிகளிடம் இழந்துள்ளதாகவும், சைபர் மோசடி தலை நகரமாக கம்போடியா நாடு திகழ்வதாகவும் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் ஒரு லட்சத்து 17ஆயிரம் பேர் சைபர் மோசடி நபர்கள் மூலம் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதற்கு ஒரே தீர்வு 7.5 கோடி மக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுக்க சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சைபர் குற்றங்கள் செய்தால் குறைந்தது ஆயுள் தண்டனை என்ற ஒரு சட்டம் அகில இந்திய அளவில் வந்தால் மட்டுமே இந்த சைபர் குற்றங்களை நாம் கட்டுப்படுத்த முடியும். சைபர் குற்றங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் எனவும் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
English Summary
People need to be aware of cyber crimes Former DGP Shailendra Babu