வேலூரில் பரபரப்பு.. "களைகட்டிய காளைகள் விடும் விழா".. தடுத்து நிறுத்திய "பீட்டா"க்கு எதிராக போராட்டம்..!! - Seithipunal
Seithipunal


சாலையில் மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மற்றும் காளை உரிமையாளர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு..!!

வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் பேரூராட்சியில் பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. காலை 10 மணிக்கு அங்கு திடீரென ஆய்வு நடத்த வந்த விலங்குகள் நல வாரிய அமைப்பினர் மற்றும் பீட்டா அமைப்பினர் அரசு விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி காளைகள் விடும் விழாவை நிறுத்துமாறு கூறினர்.

இதனால் சாலையில் திரண்ட பொது மக்கள் மற்றும் காளை உரிமையாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து விழாவுக்கு வந்திருந்த காளையின் உரிமையாளர்கள் செலவு மற்றும் காளைகளுக்கென கொடுக்கப்பட்ட பணத்தை திரும்பத் தருமாறு விழா கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காளை விடும் விழாவை திடீரென நிறுத்தியதால் 15 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காளை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து காளை விடும் திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு விழா மாற்றி அமைக்கப்பட்டதாக போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர். அதனால் காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பென்னாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People protest against Peta has stopped bull race in Vellore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->