#புதுக்கோட்டை || குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் படம் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த சில வாருங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

கடம்பையின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும், நீர் இருப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா மலைக்குடிப்பட்டி கிராமத்தில் அண்ணாநகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை விராலிமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People road block protest for drinking water in Pudukkottai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->