ஆலந்தூரில் இடுப்பளவு தேங்கிய மழை நீர்! மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு பால், பிஸ்கட் விநியோகம்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சியின் 12வது மண்டலத்தில் 156 வது வார்டு முகலிவாக்கம் அடுத்த திருவள்ளுவர் நகர், பெல் நகர் பகுதிகளில் தற்போது இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்தப் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகிறது. 

இந்த பகுதியில் இடுப்பளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளை பூட்டிவிட்டு மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மழைநீரில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு வருகின்றனர். 

மேலும் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், பால், பிஸ்கட் போன்றவற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். தீயணைப்புத் துறையினரால் மீட்கப்படும் பொதுமக்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் போரூர் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் செல்ல சரியான கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People shelter on terraces due to stagnant rain water in Alandur area


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->