திமுக பற்றி தவறாக சித்தரித்த நபர் போலீசாரால் அதிரடி கைது! - Seithipunal
Seithipunal


திமுகவை குறித்து தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த நபர்கள் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் ஊரடங்கு காலத்தில் சாராயம் காய்ச்சிய வழக்கில் நான்கு பேர் கைதானார்கள். இது சம்பந்தமான தகவல்கள் அனைத்து செய்தித்தாள்களிலும் வெளியாகி இருந்தது.

மேற்கண்ட செய்தியை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்து திமுகவை சேர்ந்த நபர்களின் முகங்களை வைத்து மார்ஃபிங் செய்து சிலர் பதிவிட்டனர். இதுகுறித்து பல்லடம் பகுதியில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் கள்ளச்சாராயம் சம்மந்தமான செய்தியை சித்தரித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணபிரசாத் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சரவணா பிரசாத்தை திருப்பூர் போலீசார் கோவையில் கைது விசாரித்து வருகின்றனர்.

உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People who portrayed wrongly the party Dmk has arrested by police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->