குழியில் இறங்கி மக்கள் போராட்டம்..பரபரப்பில் வடலூர்.!!
Peoples protest going down Vadalur
2021 சட்டப்பேரவை தேர்தலில் தற்போது ஆளும் திமுக அரசு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு கழித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு 100 கோடியை ஒதுக்கி உள்ளது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் ஆடினேன் என்று பாடியவர் வள்ளலார். வடலூரில் வருடா வருடம் அவருக்கு தைப்பூசம் அன்று ஜோதி தரிசனம் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். தமிழக மட்டுமல்லால் அண்டை மாநிலத்தவரும் வேற்று நாட்டவரும் வள்ளலாரின் ஜோதி தரிசனத்தை காண வருவார்கள்.
வடலூரில் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. பாமகவும் , சன்மார்க்க நண்பர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எதிர்ப்புகளையும் மீறி தமிழக அரசு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது .
வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதி நடைபெற உள்ள நிலையில், கட்டுமான பணிகளை நிறுத்தகோரி, கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பார்வதிபுரம் கிராம பொதுமக்கள் இறங்கி வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பேரும் பரபரப்பு நிலவியது.
English Summary
Peoples protest going down Vadalur