அரசூரில் உணவு, குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்.! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

அதுமட்டுமல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டியுள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்கவில்லை என்று அரசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கனமழையால் ஊருக்குள் சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்ற வலியுறுத்தியும், அடிப்படை தேவையான உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒரு வழி பாதையில் பேருந்துகள், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த பாதையில் தற்போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples strike in vilupuram arasur for ask food and water


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->