பெரம்பலூர் || போலீசாரை அதிரவைத்த கல்லூரி மாணவர்கள்.! ஒன்று திரண்ட மக்கள்.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் மூன்று இளைஞர்கள் பொருட்டாகள் வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார்.

இதனை பார்த்த அந்த பகுதியில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு, காவல் கண்காணிப்பாளரிடம், 'இந்த மூன்று பேரும் தொடர் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார் அளித்தனர்.

இதனையடுத்து அவர்களை சோதனை செய்த காவல்துறையினர், அந்த மூன்று பேரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த்தனர். 

இந்த மூன்று பேரில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்று போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுக்கு எப்படி கஞ்சா கிடைத்தது என்று மருவத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PERAMBALORE 2 COLLEGE STUDENT WITH GANJA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->