பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி.
Perambalur collector tested covid positive
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்த போதிலும் கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். லேசான, அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வெங்கடபிரியா தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
Perambalur collector tested covid positive