பெரியார் நினைவு நாள்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை.! - Seithipunal
Seithipunal


பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக் கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை ள 1973ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மறைந்தார்.

இந்த நிலையில் இன்று தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன் திமுக எம்.பி டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar Memorial Day Tribute to Tamil Nadu Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->