பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு திடீர் நெஞ்சுவலி.!
periyar university vice chancellor admitted hospital
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிய ஜெகநாதன் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் படி நேற்று முன்தினம் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, போலீசார் துணைவேந்தர் ஜெகநாதனை சேலம் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமரன் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் உள்ளதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டடு, ஒரு வாரகாலத்துக்கு அவர் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு இன்று நள்ளிரவு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெகநாதன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
periyar university vice chancellor admitted hospital