தலைகீழாக கவிழ்ந்த பெருமாள்!..சொர்க்கவாசல் திறப்பில் அதிர்ச்சி.!
perumal statue fell down in temple
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே பிரசித்திபெற்ற ஆலயமான ஆலேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று வைகுண்ட ஏகாதேசியான அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனால், சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆலயத்தில் காத்திருந்தனர்.
அப்போது சுவாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது. ஆனால், பாதி தூரத்திலேயே, சுவாமி சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதைப்பார்த்து பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர். சிலை கீழே விழுந்ததில் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.
இதையடுத்து சிலைக்கு மீண்டும் முறைப்படி அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு உரிய முறையில் ஊர்வலம் சென்றது. அதன் பின்பு கோயிலில் அதற்குரிய நிலையில் வைக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்று பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
English Summary
perumal statue fell down in temple