தமிழக அரசு அலுவலங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும்.! வழக்கு தொடர்ந்தவுருக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


அரசு அதிகாரிகள், அலுவலர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்க, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொது நல வழக்கில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரித்து வருகிறது என்றும், பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை அனைத்து விதமான ஆவணங்களையும் பெற லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் வழங்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்கவும், சிசிடிவி கேமரா பொருத்தி உயர் அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் எந்த வித ஆதாரமும் இல்லாமல், தன்னுடைய சுய விளம்பரத்திற்காக மட்டுமே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

மேலும் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் கே.கே. ரமேஷுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்த விதமான பொதுநல வழக்கும் தொடரக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petitioner fined who asked to install CCTV camera in all govt offices


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->